Saturday, 19 October 2024

நீங்க இப்போ ரொம்ப மாறிட்டீங்க...-மதிபாலன்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நண்பர் இப்ப என்னை சந்தித்தார். காபி சாப்பிட்டோம். அப்புறம் நிறைய பேசினோம். அப்ப அவர் நடுவில் சொன்னார். நீங்க இப்போ ரொம்ப மாறிட்டீங்க. எனக்கு லேசான சிரிப்பு வந்தது.
 "என்ன மாறிட்டேன்? உருவத்திலயா... இல்ல, உள்ளத்திலயா?"
 அவர் கொஞ்சம் சீரியஸாகவே சொன்னார், "ரெண்டுத்துலேயும் தான் ".

இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கா? நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஏன்னா நாம எல்லாரும் தினம் தினம் மாறிகிட்டே இருக்கோம்.

வாழ்க்கையின் அனுபவங்கள், எதிர்ப்படுகிற பிரச்சனைகள், உறவு சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் இப்படி நமக்கு நடந்தது எல்லாம் நம்மள நிறையவே மாற்றி இருக்கும்.

அன்னைக்கு தாராளமா செலவு செஞ்ச நீங்க, இன்னைக்கு சிக்கனமா செலவு செய்ய பழகிருப்பிங்க. நட்புக்காக உறவுக்காக என்ன வேணா பண்ணலாம்  அப்படின்னு இருந்த நீங்க, இன்னைக்கு கொஞ்சம் யோசிச்சு செய்யற மனநிலைக்கு வந்திருப்பீங்க.

இப்படிப்பட்ட மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. எப்பவும் மாறாம இருக்க,நாம ஒன்னும் கல்லோ மண்ணோ இல்லையே. அட கல்லும் மண்ணும் கூட காலப்போக்கில் மாறித்தான் இருக்கு. என்ன... அதுங்கெல்லாம் மாறுவதற்கு நூற்றுக்கணக்கான வருஷம் எடுத்துக்குது. ஆனா நாம அப்பப்போ மாறிக்கிறோம்.

ஆமா மாறுவது ஒன்னும் தப்பு இல்ல. நாம நம்மளையே தொலைக்காத வரைக்கும், மத்தவங்க இதயத்தை துளைக்காத வரைக்கும்!!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உண்மை.மாற்றங்கள் முன்னேற தேவை.👌
    உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

    ReplyDelete