Thursday, 20 March 2025

வனமழைக் கவிதை- மதிபாலன்

இளமையின் கூந்தல்
கருப்பு! 
முதுமையின் கூந்தல் 
வெளுப்பு!

பச்சை நிறக் கூந்தலை 
பார்த்ததுண்டா
தோழர்களே!

பூமி மங்கையின்
பச்சைக் கூந்தல் 
காட்டு மரங்கள்!
மரங்கள் எல்லாம்
இயற்கை வரங்கள்!

மழையின் ஆதாரம்
வனத்தின் வளமை!
வனத்தின் செழுமை 
வழங்கும் முகிலை!
முகிலின் கருணை 
பூமியின் பசுமை!

பசுமையால் மேகம்!
மேகத்தால் பசுமை!

கொடுத்து வாங்கும் 
குணத்தால்
இரண்டுமே இனிமை!

No comments:

Post a Comment